இரும்பொறை பகுதியை சேர்ந்த சுதர்சன் என்பவரிடம் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் பணம் பெற்ற பெண் ஊழியர்கள் சுபஹான் நிஷா மற்றும் சாந்தி ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணியாற்றி வருபவர் சுபஹான் நிஷா மற்றும் கருவூல அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் சாந்தி.
இந்நிலையில் கோவை இரும்பொறை பகுதியை சேர்ந்த சுதர்சனிடம் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்சம் ரூபாயை சில மாதங்களுக்கு முன் பெற்றுள்ளனர். இதனையடுத்து சில தினங்களுக்கு முன் அரசு பணி நியமன ஆணையை அளித்துள்ளனர்.
சுதர்சன் அதனை கொண்டு பணிக்கு மேற்படி வேலைகளை பார்த்த போது அந்த பணி நியமன ஆணை போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சுதர்சன் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலிசார் பெண் ஊழியர்கள் இருவர் மீதும் போலியான ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சுதர்சனிடம் பெற்ற 4 லட்சம் ரூபாயை இருவரும் திருப்பி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.