கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 'என் கனவு பள்ளி' திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற என் கனவு பள்ளி திட்ட தொடக்க விழாவில் ஜவகர்லால் நேரு பற்றி பேசிய 3ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவனுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.


கோவை: RAAC தனியார் தன்னார்வ நிறுவனம் மற்றும் Bosch கார்ப்ரேட் நிறுவனம் இணைந்து உருவாக்கியது "என் கனவு பள்ளி" திட்டமாகும்.ன் இத்திட்டமானது பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி, விளையாடுவதற்கு மைதானம், நூலகம், திறமையான ஆசிரியர்கள், சுத்தமான வகுப்பறை, சுத்தமான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் கொண்டதாக பள்ளி இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இத்திட்டத்தை கீரணத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் BGSW பிரிவு தலைவர் வி.எஸ்.சைஜு, முதன்மை கல்வி அலுவலர் பூபதி, கீரணத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் ஜவகர்லால் நேரு பற்றி பேசிய 3ம் வகுப்பு பயிலும், மாற்றுத்திறனாளி மாணவன் சஜீவனை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டி தன்னுடைய பேனாவை பரிசாக வழங்கி சிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர்:-

கீரணத்தம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை மாவட்டத்தின் முன் மாதிரி பள்ளியாக மாற்றுவதற்கு Bosch Globla software technology என்ற அமைப்பு தத்தெடுத்துள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய இலக்காக கட்டமைக்கப்பட்ட முயற்சிகளால் மாணவர்களிடம் முழுமையான வளர்ச்சியை ஏற்படுத்தும் சமூகத்தின் வளர்ச்சியை நீடித்த வளர்ச்சியாக்க கவனம் செலுத்துகிறது. BGSW's அமைப்பு சி.எஸ்.ஆர். நிதி, (RAAC) தொண்டு நிறுவனத்தின் மூன்று ஆண்டு காலதிட்டமாகும். முதல் வருடத்தில் முக்கிய உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும்.

அதன்படி, பள்ளியில் பாதுகாப்பான, சுகாதாரமான சூழல், மாணவர்களின் வயதிற்கு ஏற்ற திறமை மற்றும் ஆசிரியர்களுக்கான

புத்தாக்க பயிற்சி ஆகியவை அளிக்கப்படும். இத்திட்டத்திற்கு என் ''கனவுப்பள்ளி''' என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவர்களுக்கு தங்களுடைய பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதி, விளையாடுவதற்கு மைதானம், நூலகம், திறமையான ஆசிரியர்கள், சுத்தமான வகுப்பறை, சுத்தமான கழிப்பறை உள்ளிட்டவை வசதிகள் கொண்டதாக இருக்கவேண்டும் என்று கனவுகள் இருக்கும் இதனை நிறைவற்றுவதற்கு தனியார் பங்களிப்புடன் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒரு சிறுமரம் நட்டு வைத்ததில் இருந்து எப்படி ஒவ்வொரு வருடமும் வளர்ந்து மிகப்பெரிய மரமாக உருவாகி காய் கனிகளை தருகிறதோ, அதுபோல்தான், ஒரு மாணவன் துவக்கப்பள்ளியிலிருந்து உயர்கல்வி கற்று உயர்ந்த நிலையினை அடைந்து, நிறைய மக்களுக்கு உதவிகளை செய்யவேண்டும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம்தேடி கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் வர உதவுதற்கு என் "கனவு பள்ளி" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை துவக்கி வைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...