கோவையில் வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்

வடகிழக்கு பருவமழையையொட்டி கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகளை கண்காணிக்க மண்டல கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில்‌ வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்‌ ஆணையாளர்‌ பிரதாப்‌ தலைமையில்‌ நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆணையாளர் பிரதாப், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை கண்காணிக்க மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்‌ செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.



அதன்படி, கிழக்கு மண்டலத்திற்கு டாக்டர் எஸ்‌.செல்வசுரபி, மேற்கு மண்டலத்திற்கு சுபநந்தினி, மத்திய மண்டலத்திற்கு ராஜசேகரன்‌ ,வடக்கு மண்டலத்திற்கு கோவிந்தராஜலு, தெற்கு மண்டலத்திற்கு பாலசுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநகராட்சியின்‌ பல்வேறு பிரதான கால்வாய்கள்‌, மழைநீர்‌ வடிகால்கள்‌ தூர் வாரப்பட்டுள்ளதாகவும் மேலும்‌ பல மழை நீர் வடிகால்கள்‌ தற்போது தார்வாரப்பட்டு தயார்‌ நிலையில்‌ உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவினாசி மேம்பாலத்தின்‌ கீழ்பகுதி, கிக்கானி பாலம்‌ ஆகியவற்றில்‌ கூடுதலாக 2 அதிவேக மின்மோட்டார்கள்‌ பயன்படுத்தி கடந்த சில நாட்களாக தேங்கிய மழைநீர் உடனுக்குடன்‌ வெளியேற்றப்பட்டதாக ஆணையாளர் பிரதாப் கூறினார். தெற்கு மண்டலத்திற்குட்பட்ட 86, 87, 88 ஆகிய வார்டு பகுதிகளில்‌ தற்போது நீர்நிலை பாதைகளையும்‌, நன்‌ நில புறம்போக்கு மற்றும்‌ வழித்தடத்தை கண்டறியவும்‌, ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும்‌ நில்‌ அளவை செய்பும்‌ பணியானது தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அப்பகுதிகளில்‌ உடனடியாக ஆக்கிரமிப்புகள்‌ அகற்றப்பட்டு, மழைநீர் வடிய தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம்‌ உடனுக்குடன் மேற்கொள்ளும் என்று கூறிய ஆணையாளர் பிரதாப், பெரியகுளம்‌, வாலாங்குளத்திலிருந்து வெளியேறும்‌ உபரிநீரின்‌ அளவினை கண்காணித்திடவும்‌, மேலும்‌, மாநகராட்சியில்‌ தேவைப்படும்‌ இடங்களில்‌ மழைநீர் வடிகால்களை தூர்வாரிடவும்‌ அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களுக்கும்‌ தலா 100 மணல்‌ மூட்டைகள்‌ வீதம்‌ 500 மணல்‌ மூட்டைகளை தயார்‌ நிலையில்‌ வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், கோவையில் மழைநீர் வடிகால்கள்‌, சாலைகள்‌, தெருக்களில்‌ சாய்தளம்‌ அமைத்து ஆக்கிரமித்து உள்ள சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்றும்‌ பணியானது நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி நகர் நல மையங்களில்‌ பணியாற்றும்‌ மருத்துவர்கள்‌, செவிலியார்கள்‌ ஆகியோருக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள்‌ நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஆணையாளர் பிரதாப், மருந்து, மாத்திரைகள்‌ போதிய அளவு இருப்பு வைத்திடவும்‌, கிருமி நாசினி, தண்ணீர்‌ உறுஞ்சும்‌ மோட்டார்‌ பொருத்திய லாரிகள்‌ தேவைப்படும்‌ இடங்களுக்கு அனுப்பிட தயார்‌ நிலையில்‌ வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும் பழுதடைந்த, பயன்பாடற்ற அரசு கட்டடங்கள்‌ இருப்பின்‌ அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேன்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பொதுமக்கள்‌ பருவமழை தொடர்பான சந்தேகங்கள்‌, தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்‌.8190000200, 0422-2302323, 0422-2300132 ஆகிய எண்களின்‌ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.



இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலா்‌ டாக்டர்‌.செல்வசுரபபி, துணை ஆணையர்‌ சுபநந்தினி, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிக கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் ராஜசேகரன்‌, தமிழ்நாடு வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர்‌ கோவிந்தராஜலு, மண்டல உதவி ஆணையார்கள்‌ ,மாநகராட்சி பொறியாளா்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ பலரும் கலந்து கொண்டனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...