அண்ணா பல்கலை.கோவை மண்டல வளாகத்தில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழா

மருதமலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான அறிமுக விழாவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்து அறிவுரைகளை வழங்கினார்.



கோவை: வடவள்ளி அடுத்த மருதமலை பகுதியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தில் நடப்பு கல்வியாண்டில்‌, பி.டெக்‌.செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ தரவு அறிவியல்‌, பி.இ.கணிப்பொறி அறிவியல்‌, பி.இ.தகவல்‌ தொடர்பியல்‌, பி.இ.மின்னியல்‌ பொறியியல்‌, பி.இ.இயந்திரவியல்‌ பொறியியல்‌ ஆகிய ஐந்து இளங்கலை பொறியியல்‌ படிப்புகளுக்கான வகுப்புகள்‌ தொடங்கப்பட உள்ளன.



இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மரபு சார்ந்த கல்வி முறைகளுடன்‌, மாணவர்களின்‌ தனித்திழமையை வளர்த்துக்கொள்ள வழிகாட்டும்‌ “நான்‌ முதல்வன்‌” என்னும்‌ தமிழக அரசின்‌ திட்டத்தினைக்‌ குறித்தும்‌, அதன்‌ வாயிலாக பல்லாயிரக்கணக்கான மாணவா்கள்‌ பயிற்சி பெற்று வருவதையும்‌ குறிப்பிட்டார்‌. மேலும் இனி வரும்‌ 25 ஆண்டுகள் இந்தியாவிற்கான ஆண்டுகளாக உலக அரங்கினுள்‌ அமையும்‌ என்றும் பிரதாப் நம்பிக்கை தெரிவித்தார்‌.



வரும் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்வு நிரலில், இன்றைய தொழல்யுகத்தின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தி,பன்முகக்‌ கண்ணோட்டத்தில்‌ நடத்தப்படவுள்ளது.தமிழகத்தின்‌ புகழ்‌ பெற்ற பேச்சாளர்கள்‌ மற்றும்‌ வல்லுநாகள்‌,இதில் பங்கேற்று தொழில்நுட்பம்‌ முதல்‌ சூழலியல்‌ வரையிலான களங்களைப்‌ பற்றிய ஆழ்நோக்கினை மாணவர்களுக்கு வழங்க உள்ளனர்.



இந்நிகழ்ச்சியில்‌ அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்தின் முதன்மையர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌.சரவணக்குமா, தமிழ்நாடு மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர்‌ ஓசை காளிதாச, கோவை ரூட்ஸ்‌ நிறுவன இயக்குநர்‌ டாக்டர்.கவிதாசன், பேராசிரியா்‌ முனைவர் மாஷல்‌ அந்தோணி, முனைவர்‌ எஸ்‌.என்‌.மகாலட்சுமி மற்றும்‌ மண்டல வளாகத்தின்‌ பேராசிரியர்கள்‌, நிர்வாக அலுவலர்கள்‌, மாணவ, மாணவிகள்‌ மற்றும்‌ பெற்றோர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் 49 மனுக்கள் பெறப்பட்டது

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர், சாலை, வரி, சுகாதாரம் உள்ள...

மடத்துக்குளம் ராஜவாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள கோரி விவசாயிகள் மனு

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள காரத்தொழவு ராஜவாய்க்காலில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு, ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலங்கள...

கோவையில் 7 துணை மின் நிலையங்களில் நாளை (09.06.2026) மின் தடை

கோவையில் கவுண்டம்பாளையம், மாதம்பட்டி, மருதூர், தேவராயபுரம், பெரியநாயக்கன்பாளையம், பவானி அணை, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட 7 த...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...

கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர...

கோவையில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயம்

கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் பெண் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சரவணம்பட்டி, ஆவாரம்பாளையம...