பல்லடம் அருகே ஓடும் காரில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய கணவன்- மனைவி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒடும் காரில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன் - மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது தனது மனைவி ராஜேஸ்வரியுடன், உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காமநாயக்கன்பாளையத்த்தை அடுத்த வதம்பச்சேரி பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.



காமநாயக்கன்பாளயம் அருகே கார் வந்தபோது முன்பகுதியில் திடீரென புகை வர தொடங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் உடனடியாக காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியுடன் அவசர அவசரமாக கிழே இறங்கி உயிர் தப்பினார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.



இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...