கோவையில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கனமழையால் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில் சிறப்பு குழுவைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இங்கு மக்காச்சோளம், காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் உள்ளிட்ட வேளாண் பயிர்கள், தோட்டக்கலைத்துறை பயிர்களான சின்ன வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, பீட்ரூட் வெண்டை பந்தல் சாகுபடி பயிர்களாக பீர்க்கன், பாகற்காய் புடலை சுரைக்காய் என பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.



வட கிழக்கு பருவ மழை தொடங்கி நிலையில், கடந்த ஓருவாரத்தில் தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும், நடவு செய்த நாற்றுக்களும் கடுமையாக பாதித்துள்ளன.



பயிர்கள் வளர்ச்சி பாதித்ததோடு வயல்களில் தேங்கிய மழை வெள்ளம் காரணமாக வேர்கள் அழுகி சாய்ந்துள்ளன. கன மழைக்கு தாங்காமல் காய்கறி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் முழுமையான இழப்பை சந்தித்துள்ளனர்.



தக்காளி செடிகள் அனைத்தும் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. வெங்காய பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளன. பீட்ரூட், வெண்டை, கத்தரி, கொத்தமல்லி என அனைத்து காய்கறிகளும் கன மழையால், அழுகியும், மகசூல் இல்லாமல் பாதித்துள்ளது.

ஒவ்வொரு பயிர் சாகுபடிக்கும் ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்து வயல்களில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்காச்சோளம், நெல், காய்கறி பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ளன.



பொருளாதார சேத நிலையை தாண்டி அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வேளாண் துறை, தோட்டக் கலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை மாவட்ட நிர்வாகம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குழுவானது, அனைத்து கிராமங்களிலும் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி முழுமையான நிவாரணம் பெற்றுத்தர வேண்டும்.

மேலும், பயிர்க்காப்பீடு செய்தவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...