கோவையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான சிறப்பு முகாமில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 9ம்தேதி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

மேலும் நவம்பர் 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பாப்பநாயக்கன்பாளையம் ராசகொண்டலார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும் அங்குள்ள படிவங்கள் அனைத்தும் சரியாக நிரப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, தெற்கு வட்டாட்சியர் கல்பனா அலமேலு, தேர்தல் துணை வட்டாட்சியர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...