நீலகிரி அருகே கெத்தை மலைப் பாதையில் அரசு பேருந்தை வழி மறித்த காட்டு யானைகள் - பரபரப்பு

கெத்தை மலைப்பாதையில் காட்டு யானைகள் வழிமறிக்கும் சம்பவங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க வனத்துறை எச்சரிக்கை.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருந்து மஞ்சூர், கெத்தை, காரமடை வழியாக கோவை செல்லும் மூன்றாவது மாற்றுபாதையை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதிக்கு கடந்த சில நாட்களாக யானை கூட்டங்கள் அதிக அளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வாறு வந்துள்ள யானைக் கூட்டங்கள் கெத்தை மலைப்பாதையில் அடிக்கடி முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் வாகன ஓட்டிகளையும் அச்சறுத்தி வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தை யானை கூட்டம் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக பேருந்து செல்ல வழி விடாமல் சாலையின் நடுவில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



யானைகளை கண்டு அச்சமடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை உடனடியாக அதே இடத்தில் நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அரை மணி நேரத்திற்கு பின் யானை கூட்டம் சாலையில் இருந்து விலகிச் சென்றதை தொடர்ந்து, அரசு பேருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றது.

அரசு பேருந்தை யானைகள் வழிமறித்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கெத்தை மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...