டேன் டீ தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து கூடலூரில் ஆய்வு மேர்கொண்ட பின் இதுகுறித்து பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
நீலகிரி: 1964 ஆம் ஆண்டில் சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு தேயிலைத் தோட்டக் கழகம் (டேன்டீ) உருவாக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், குன்னூர், நடுவட்டம் கோவை மாவட்டம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை வசம் இருந்த சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் தேயிலைத் தோட்டம் உருவாக்கப்பட்டு சுமார் 10 ஆயிரம் பேர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அப்போது ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அரசே வீடு கட்டித் தரும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் டேன் டீ நிறுவனம் லாபத்தில் இயங்கிய வந்த நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் 3 ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கட்டுள்ளது.
இதற்கு டேன்டீ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை தொழிலளர் காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான செந்தில் தொண்டமான், கூடலூர் பகுதிக்கு வந்து டேன்டீ தொழிலாளர்களை நேரில் சந்தித்து கொட்டும் மழையிலும் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தொண்டைமான் பேசியதாவது, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய டேன்டீ தொழிலளர்கள் ஒப்பந்தப்படி தமிழக அரசு பணியமர்த்தியதாகவும் தற்போது அவர்களை பணியிலிருந்து நிறுத்தினால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
எனவே டேன்டீ தொழிலாளர் பிரச்சனை குறித்து இந்திய பிரதமர், வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் ஆகியோரை சந்தித்து டேன் டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.