திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் பயங்கரமாக மோதிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர்: கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாராபுரம் நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பணப்பாளையம் பகுதியில் கார் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து முன்புறம் சென்றுகொண்டிருந்த இருச்சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து காயமடைந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் முதற்கட்டமாக சொகுசு காரில் வந்தவர்கள் தாரபுரத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் வினோத் என தெரியவந்தது.விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.