முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார். அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர வேண்டும் என காத்துக்கொண்டிருப்பதாகவும் அதற்கான நேரம் விரைவில் வரும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் மோடியை பொறுத்தவரை, தமிழக மக்களின் மீது எல்லையற்ற அன்பு, பாசம் வைத்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.