நிலகிரி மாவட்டம் குன்னூரில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி: குன்னூர் ஆல்வார்பேட் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் மகாலட்சுமி தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குன்னூர் அறிஞர் அண்ணா காலனியை சேர்ந்த சாதிக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்கொலைக்கு தூண்டியது, தடயத்தை அழிக்க முற்பட்டது என அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.