அன்னூர் தொழிற்பூங்கா: நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் தொழிற்பூங்கா அமைக்க நிலங்கள் நில எடுப்பு/நில உரிமை மாற்றம் செய்திட தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997-ன் மூலம் கையகப்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் 1563.75 ஹெக்டர் பரப்பளவில் அமைய உள்ள தொழிற்பேட்டைக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் வாயிலாக தொழில் பூங்கா அமைக்க நிலம் எடுப்பு சட்டத்தின் கீழ் நிலம் கையகப்படுத்தவும், அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்தவும், அரசு புறம்போக்கு நிலங்களை நில உரிமை மாற்றம் செய்ய நிர்வாக அனுமதி வழங்க கோவை மாவட்ட ஆட்சியர் கோரியிருந்தார்.

அதனடிப்படையில்,அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் தொழில்பேட்டை அமைய உள்ள இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



இந்த பிரமாண்ட தொழிற்பேட்டை அன்னூர் தாலுகாவில் உள்ள குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், பொகலூர் ஊராட்சிகள் மற்றும் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள இலுப்பந்தம், பள்ளேபாளையம் ஊராட்சிகளில்அமைய இருக்கின்றன. இதன் மொத்த பரப்பளவு மொத்தம் 1563.75. ஹெக்டர் ஆகும்.

நில இழப்பீடு தொகை 789 கோடி. நிர்வாக செலவு 114 கோடி- உத்தேச கணிப்பு..!

மேற்கண்ட, நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள நிலங்களுக்கான உத்தேச இழப்பீட்டுத் தொகை மற்றும் நிர்வாகச் செலவினங்களுக்கான மொத்த உத்தேச மதிப்பாக

நில கையக்கப்படுத்த உத்தேச இழப்பீடு தொகையாக 789 கோடியே 10 லட்சம் ரூபாய் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காகஉத்தேச தொகையாக 114 கோடியே 42 லட்சம் ரூபாய் என மொத்தம் 904 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஆட்சியர் கோரியிருந்தார்.



மேலும், இந்த நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம் அமைக்கப்பட்டு, அதில், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், உதவியாளர் என 202 பணியிடங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த அலுவலர்கள், 2023 டிசம்பர் வரை மொத்தம் 202 அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் கருத்துரு மற்றும் நில நிர்வாக ஆணையரின் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசாங்கம் அன்னூர், மேட்டுப்பாளையம் தாலுகாவில் ஆறு ஊராட்சிகளில் 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தொழில் பூங்கா அமைக்க நில எடுப்பு செய்ய நிர்வாக அனுமதி அளித்துள்ளனர்.

தொழில் வளத்தை பெருக்கும் என நம்பிக்கை.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கபடும் கோவை சிறு, குறு தொழில்களுக்கு பெயர் போனது.இந்த நிலையில், தற்போது அமைவுள்ள அன்னூர் தொழிற்பூங்கா, கோவையின் தொழிற்துறைக்கு மேலும் வலு சேர்த்து, புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த தொழிற்பேட்டை கிராமப்புறத்தை ஒட்டி இருப்பதனால் கிராமப்புற மற்றும் நகர்ப்புற படித்த பட்டதாரிகள் முதல் பாமரர்கள் வரை பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

அன்னூர் தொழில் பூங்கா சர்வதேச அளவிலான தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்படும் என்றும் ஏற்கனவே ரோபோட் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டு இருக்கும் கோவை தொழில் துறையினர், அன்னூர் சிப்காட்டில் நவீன வசதிகளுடன் தொழில் கூடங்களை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவீன தொழில்நுட்பம் மூலம் சர்வதேச அளவில் உள்ள பெரும் முதலீட்டாளர்களின் கவனம் அன்னூர் சிப்காட் பக்கம் திரும்பும் என்று தொழில் துறையினர் தெரிவித்தனர்.

விவசாயிகள் கடும் எதிர்ப்பு - தமிழ்நாடு அரசாங்கத்திடம் மேல்முறையீடு..!

அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஆறு ஊராட்சிகளுக்கு உட்பட்ட இடங்களில் இந்த தொழில் பூங்கா அமைய உள்ளதால், கிராமங்களை உள்ளடக்கிய விவசாய நிலங்கள் ஏராளமாக கையகப்படுத்தப்படும் என்பதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அரசாங்கம் நிலத்திற்காக கொடுக்கும் இழப்பீடு போதுமானதாக இருக்காது என்பதால், வேளாண் குடிகளின் எதிர்ப்பை புரிந்து கொண்டு அரசு

இத்திட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.



குறிப்பாக, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் தொழிற்பூங்கா அமைய கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...