தொடர்மழை பெய்து வரும் நிலையில், நாளை ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலைக்கு சென்று வீடு திரும்பவோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ - மாணவியர் மழையால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாளை கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை அடுத்து, மாணவ - மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ன்னெச்சரிக்கையாக கோவை மாவட்டத்தில் நாளை ஒரு நாள் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.