கோவை ராம் நகர் பகுதியில் லாட்டரி விற்ற பாஜக பிரமுகருக்கு லாக்கப்..!

காந்திபுரம் ராம் நகர் பகுதியில் திரையரங்கு அருகே சபரி பாலன் என்பவர் லாட்டரி விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் ராம் நகர் பகுதியில் திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது ,லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் ஒருவர் பிடிபட்டார்.

விசாரணையில், அவர் சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த சபரி பாலன் என்பது தெரியவந்தது. மேலும், இவர் கோவை பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி செயலாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து,

அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவரது கைதை தொடர்ந்து காந்திபுரம் மற்றும் சிவானந்தா காலனி பேருந்து நிலையம் வரும் நபர்களை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

லாட்டரி விற்ற குற்றத்துக்காக பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பாஜக மீது விமர்சனத்தை ஓங்க செய்துள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...