கோவை அவிநாசி சாலை சித்ரா கூட்டரங்கத்தில் 60வது ஜவுளி உற்பத்தி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது

கோவை அவிநாசி சாலையில் உள்ள சித்ரா கூட்டரங்கில் 60வது ஜவுளி உற்பத்தி கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்து தமிழகம் ரெடிமேடு ஆடைகளின் ஏற்றுமதியில் எட்டியுள்ள வளர்ச்சிகளை குறித்து சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள சித்ரா (SITRA- The South India Textile Research Association) கூட்டரங்கத்தில் 60வது Joint Technological Conference (ஜவுளி உற்பத்தி கருத்தரங்கம்) நடைபெற்றது.



இதனை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.



இந்நிகழ்வை சித்ரா Farmer chairman சீனிவாசன் தலைமை தாங்கினார். சித்ரா இயக்குநர் வாசுதேவன், சிஐடிஐ சேர்மேன் ராஜ்குமார், இந்திய ஜவுளித்துறை அரசு அதிகாரிகள் உட்பட கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், ஜவுளித்துறை நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் காந்தி, சித்ரா நிறுவனம் துவங்கப்பட்டது முதல் ஜவுளித் துறைக்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்து வருவதாக தெரிவித்தார். ஜவுளியின் தரம் மற்றும் உற்பத்தியை அதிக இந்த நிறுவனம் சிறப்பு கவனத்தை செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மாசு கட்டுபாட்டிற்கு இந்நிறுவனம் மற்றும் இது சார்ந்த நிறுவனங்களும் முயற்சி எடுத்து வருகின்றன அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் அதுதான் தற்பொழுது நாட்டிற்கு தேவையாக உள்ளது என தெரிவித்தார்.

தமிழக முதல்வர் என்னை இந்த துறைக்கு அமைச்சராக நியமித்த பொழுது சம்பந்தமில்லாத துறைக்கு இணை அமைச்சராக நியமிக்கிறார்களே என்ற கவலைப்பட்டதுண்டு எனக் கூறிய அவர் எது இருந்தாலும் அதனை முடித்துக் காட்டுவேன் என்ற நம்பிக்கை எனக்கு சிறுவயதில் இருந்தே இருந்ததனால் இத்துறையின் அரசு அலுவலர்களுடன் இணைந்து செயல்பட்டதாகவும் முதல்வர் காந்தி தான் இத்துறைக்கு சரியானவர் என்று எண்ணி இத்துறைக்கு தன்னை நியமித்துள்ளார் என்பது எனக்கு தெரியாது என என கூறினார்.

மேலும் இத்துறைக்காக தனி கமிட்டி அமைத்து இதனை முன்னேற்ற வேண்டும் என பாடுபடுபவர் தமிழக முதல்வர் என தெரிவித்தார். தமிழக முதல்வரின் ஆலோசனையின் படி technical textile பிரிவின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

மேலும் பல்வேறு விஷயங்களில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழகம் இரண்டாது இடத்திலும் ரெடிமேடு ஆடைகள் ஏற்றுமதியில் 50,000 கோடி தமிழகம் எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ள துறையும் இந்த துறை தான் என தெரிவித்தார். இங்குள்ளவர்கள் முழு முயற்சியை எடுப்பதால் தான் இத்துறை தமிழகத்தில் மிகச் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் இம்மாதம் சென்னையில் நடைபெற உள்ள இத்துறை சார்ந்த கூட்டத்தில் பங்கேற்க ஜப்பான் நாட்டினரை அழைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு 80 லட்சம் கோடி எக்கனாமிக் இலக்கை எடுப்பதற்கு திட்டம் தீட்டி உள்ளதாக தெரிவித்தவர் அதை எட்டுவதற்கு ஜவுளித்துறை மிக முக்கியமானதாக உள்ளது என தெரிவித்தார். தமிழக அரசு தொழில் துறைக்கு என்றும் உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...