மனைவியை தவறாக பேசிய நபரை தட்டிக்கேட்ட கணவர் குத்திக்கொலை - திருப்பூரில் பரபரப்பு..!

திருப்பூர் கல்லூரி சாலை அருகே மனைவியை தவறாக பேசிய நபரை தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் கல்லூரி சாலை துவாரகை நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் பிரவீன். கும்பகோணத்தை சேர்ந்த இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்து வரும் அண்ணாமலை என்பவர் பிரவீனின் மனைவி ராணி என்பவரை தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பிரவீன், மது போதையில் அண்ணாமலை வீட்டிற்கு தகராறு செய்ய சென்றுள்ளார். ஆனால், அண்ணாமலை வெளியூர் சென்றிருந்ததால், பூட்டிய வீட்டின் முன்பு நின்று அண்ணாமலையை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணாமலை நேற்றிரவு வீட்டிற்கு திரும்பி வந்து மது போதையில் பிரவீன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரவீனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார், அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம், துவாரகை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...