கோவை கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது

கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில் இன்று நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் பேச்சாளர்‌ முனைவர்‌ மோகனசுந்தரம்‌ கலந்து கொண்டு மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்கள்‌ வரவேற்பு விழா கல்லூரி அரங்கில்‌ மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. இதில்‌ 500 மாணவர்கள்‌ மற்றும்‌ அவர்தம்‌ பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்‌.



இந்த விழாவிற்கு கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ முனைவர்‌.இரா.வசந்தகுமார்‌ தலைமை தாங்கினார்‌, கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌.அருள் கார்த்திக் அனைவரையும்‌ வரவேற்றார்‌. கல்லூரி முதல்வர்‌ அறிக்கை வாசித்தார்‌, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பட்டாமன்ற பேச்சாளர்‌ முனைவர்‌ மோகனசுந்தரம்‌ கலந்து கோண்டு சிறப்புரையாற்றினார்‌



அவர்‌ தனது உரையில்‌ :-

இன்றைய மாணவர்கள்‌ கல்வியையும்‌ ஒழுக்கத்தையும்‌ இரு கண்களாகக்‌ கருத வேண்டும்‌ என்று கூறினார்‌, மேலும்‌ அவர்‌ தனது உரையில்‌ இந்திய மாணவர்கள்‌ எதையும்‌ சாதிக்கும்‌ வல்லமை கொண்டவர்கள்‌ என்றும்‌ அறிவியல்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌, இயந்திரவியல்‌ போன்ற பல்வேறு துறைகளில்‌ நம்‌ நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரனமாக விளங்குவதாகக்‌ கூறினார்‌.



மாணவர்கள்‌ நல்லவற்றைக்‌ கேட்டு வேண்டும்‌ கவனச்சிறல்கள்‌ இல்லாமல்‌ தன்‌ இலட்சியங்களை நிறைவேற்ற வேண்டும்‌ மற்றும்‌ தன்னை பேற்றேடுத்த பெற்றோர்களை இறுதிவரை பேணிகாக்க வேண்டும்‌ என்று மாணவர்களைக்‌ கேட்டுக்கொண்டார்‌.

இந்த விழாவில்‌ கற்பகம்‌ தொழில்நுட்பம்‌ கல்லூரியின்‌ துணை முதல்வர்‌ முனைவர்‌.பானு, துறைத்தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, பட்டம்‌ பெற்றவர்களின்‌ பெற்றோர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...