வரும் நவம்பர் 13ஆம் தேதி ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் ஆற்காட்டில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு.
கோவை: ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் வரும் நவம்பர் 13ஆம் தேதி ஆற்காட்டில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மண் காப்போம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஷா அறக்கட்டளையின் "மண் காப்போம்" இயக்கம் சார்பில் நெல் சாகுபடி குறித்த இயற்கை விவசாய கருத்தரங்கம் ஆற்காட்டில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். விளாப்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ மகாலட்சுமி செவிலியர் கல்லூரியில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் பல்வேறு முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 2 கிலோ விதை நெல்லில் 90 மூட்டை மகசூல் (7000 கிலோ) எடுத்த சாதனை விவசாயி நாகரத்தினம் நாயுடு கலந்து கொண்டு நெல்லில் அதிக மகசூல் எடுக்கும் தொழில்நுட்பங்கள் பற்றி உரையாற்ற உள்ளார்.
மேலும், நெற்பயிரில் வரும் பூச்சிகள், நோய் தாக்குதல் பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி. நீ. செல்வம் ஆலோசனை வழங்க உள்ளார். குறிப்பாக, நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை கண்டறிவதில் தொடங்கி அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க உள்ளார்.
பாரம்பரிய நெல் சாகுபடியில் அதிக மகசூல் எடுத்து தமிழக அரசின் விருது பெற்ற பெண் விவசாயி அம்பாசமுத்திரம் லட்சுமி தேவி, நெல் சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் பாரம்பரிய நெல் ரகங்களிலும் அதிக மகசூல் எடுக்கும் வழிமுறைகள் குறித்தும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
மதுரையை சேர்ந்த தான்யாஸ் நிறுவனத்தின் தினேஷ் மணி, பாரம்பரிய அரிசியில் மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வழிமுறைகளை விவசாயிகளுக்கு கற்றுக் கொடுக்க உள்ளார். இது தவிர பாரம்பரிய விதைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, களையெடுக்கும் கருவிகளின் கண்காட்சியும் இந்த கருத்தரங்கில் இடம்பெற உள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், 94425 90077, 83000 93777 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.