கோவை துடியலூர் அருகே தண்டவாளத்தில் சிக்கிய லாரி - பயணிகள் ரயில் 100 மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

துடியலூர் ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தின் உயரம் காரணமாக சரக்கு லாரி ஒன்று பழுதான நிலையில், கேட்கீப்பரின் சாதூரியத்தால் பயணிகள் ரயில் 100 மீட்டருக்கு முன்பே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.


கோவை: கோவை - மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளங்கள் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2 மாதங்களாக புதிதாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது மாற்றப்பட்டுள்ள தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த தண்டவாளங்களில் உயரத்தைவிடஒரு அடி வரை உயரமாக உள்ளது. இது ஏற்கனவே அங்கிருக்கும் தார் சாலையில் இருந்து ஒரு அடி உயரமாக உள்ளது.

இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் கார்களின் அடிப்பகுதி தண்டவாளங்களில் உரசி சேதமடைந்து வருகின்றன. அதேபோல் அதிக பாரத்துடன் வரும் லாரிகள் தண்டவாளங்களை கடக்க முடியாமல் ஆக்சில் உடைந்து பழுதாகி நிற்கின்றன.



இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலுக்காக ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில், அவ்வழியாக சுமார் 30 டன் எடையுள்ள சரக்குகளை ஏற்றி வந்த லாரி தண்டவாளத்தை கடக்க முயன்றது.

அப்போது தண்டவாளத்தின் உயரம் காரணமாக தண்டவாளத்தை கடக்க முடியாமல் அப்படியே தண்டவாளத்தின் நடுவே பழுதாகி நின்றுவிட்டது. அப்போது கோவை - மேட்டுப்பாளையம் பயணிகள் ரயிலுக்கு கேட் கீப்பர் உடனடியாக சிவப்பு விளக்கை காண்பித்து லாரிக்கு 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தினார். இதன் காரணமாக லாரி மீது ரயில் மோதும் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.



இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் லாரியை தண்டவாளத்தில் இருந்து தள்ளி நகர்த்த முற்பட்டனர் ஆனால் லாரியில் 30 டன் அளவிற்கு சரக்கு இருந்ததால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகும் நகர்த்த முடியவில்லை. இந்நிலையில், லாரியின் பின் பக்கத்தில் இருந்து மற்றொரு டெம்போ மூலம் தள்ளி தண்டவாளத்தில் இருந்து லாரி நகர்த்தப்பட்டது.



இதையடுத்து உடனடியாக ரயில்வே கேட் மூடப்பட்டு அங்கி காத்திருந்த பயணிகள் ரயில் ஒரு மணி நேர தாமதத்திற்கு பின் கோவை நோக்கி புறப்பட்டு சென்றது. இதே ரயில்வே கேட் பகுதியில் ஏற்கனவேதண்டவாளத்தின் உயரம் காரணமாக 3 லாரிகள்பழுதாகி நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே உடனடியாக தண்டவாளத்தின் உயரத்திற்கு ஏற்றவாறு சாலையின் உயரத்தையும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...