கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.



கோவை: மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.



இக்கூட்டத்தில், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை வரவேற்பு, கட்சி சார்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கோவை மாவட்டத்தில் திமுக அலுவலகம் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகிப்பார்கள் எனவும் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கட்சி சார்பில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், நகர, பகுதி, ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...