உஷார்..! கோவையில் பேன் கார்டு அப்டேட் செய்வதாக கூறி வங்கி கணக்கை ஹேக் செய்து மோசடி - ரூ.1,90,000 பணத்தை மீட்டு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை.

வங்கி கணக்குடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று அனுப்பப்பட்ட போலியான லிங்கை கிளிக் செய்தால் பி கே புதுரை சேர்ந்த ஸ்ரீ லஜ்குமார் என்பவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 2,14,997/- ஹேக் செய்து எடுக்கப்பட்டுள்ளது. புகார் தொடர்பாக, முதற்கட்டமாக ரூ 1,90,000 பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.


கோவை: பேன் கார்டு, ஆதார் கார்டு, கிரிடிட் கார்டு அப்டேட் செய்கின்றோம் என்றும் அக்கவுண்ட் வெரிஃபிகேசன், டேட்டா வெரிஃபிகேசன் என்றும் ஃபோனில் ஸ்கேமர்கள் பேசி பணத்தை கொள்ளையடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்திருக்கின்றன.

கடந்த 17.10.2022 -ம் தேதி கோவை B.K. புதூரைச் சேர்ந்த ஸ்ரீலஜ்குமார் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு வங்கி கணக்குடன், பான் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றகுறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த நபர் அதிலிருந்த லிங்க் ஐ கிளிக் செய்து வங்கி விவரங்களை பதிவு செய்துள்ளார்.

இதனை பயன்படுத்திய அந்த மோசடி நபர், ஸ்ரீலஜ் குமார் வங்கி கணக்கை ஹேக் செய்து, Rs.2,14,997/- பணத்தை திருடியுள்ளார். பின்னர், அவருக்கு அனுப்பப்பட்ட லிங்க் போலியானது என்று உணர்ந்த ஸ்ரீலஜ் குமார் சைபர் கிரைம் போலீசாரிடம்புகார் அளித்தார்.

புகார் தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர்பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், சிட்டி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் பணத்தை மீட்க விரைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதனடிப்படையில், ஸ்ரீலஜ்குமார் வங்கி கணக்கை ஹேக் செய்த சைபர் கிரைம் ஹேக்கர் நடவடிக்கையை பிளாக் செய்து, பணத்தை திரும்ப அனுப்ப சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், முதல்கட்டமாக இழந்த பணத்தில் ரூபாய் 1,90,000 மீட்கபட்டு மனுதாரரின் கணக்கில்சேர்க்கப்பட்டது.

ஒருபுறம் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், 'அப்டேட்' என்ற பெயரில்பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றி வரும் சைபர் குற்றங்கள் தொடர்கதையாகி வருகிறது என்பதேநிதர்சனம்.

எனவே, யாரேனும் அழைத்து அப்டேட் செய்ய வேண்டும், பான் கார்டு அல்லது ஆதார் கார்டை வாங்கி உடன் இணைக்க வேண்டும் இவற்றை செய்ய உங்களது வங்கி விவரங்கள் மற்றும் ஓ டி பி யை கேட்டால் எந்த சூழலிலும் பகிர கூடாதென்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...