தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பதுபோல மாய தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி - கோவையில் அமைச்சர் மனோதங்கராஜ்

2030க்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட முடிவு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளை செய்து வருவதாக அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்.


கோவை: கோவை மாவட்டம் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மனோ தங்கராஜ், செய்தியாளர்களிடம் பேசியதாவது, 2030ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தின் பொருளாதாரம் ஒரு ட்ரில்லியனை எட்ட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார்.

கோவை மாநகரம் மிகச்சிறந்த வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு சார்டட் அக்கவுண்ட்ஸ் (Charted Accounts) தேவை உள்ளது. தமிழகத்தில் ஒரு சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது போன்று மாயத் தோற்றத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்கிறார்கள் அது தோற்றுப் போகும்.

கோவை மாவட்டத்தில் மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் "நான் முதல்வன்" திட்டத்தை அறிமுகப்படுத்தி திறன் மேம்பாட்டிற்கு முக்கிய கவனத்தை செலுத்தி வருகிறார். பிற நாடுகள் பிற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது தமிழகத்தில் உள்ள மின் கட்டணம் நியாயமான மின் கட்டணம் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...