கோவையில் புதிதாக அமையவுள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்யக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கைக்கோளபாளையம் அருகே புதிதாக அமையவுள்ள டாஸ்மாக் மதுபான கடையால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு.


கோவை: கோவை மாவட்டம் காளப்பட்டி அடுத்த கைக்கோளபாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் புதிதாக மதுபான கடையைஅமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் பேசியதாவது, பச்சாபாளையத்தில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை கைக்கோளப்பாளையம் சாலைக்கு மாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மதுபான கடையானது கைக்கோளபாளையம் கிராம குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. இந்த மதுபான கடையை கடந்து தான் மாணவ, மாணவிகள் காளப்பட்டியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு செல்ல வேண்டும்.



வேலைக்கு செல்லும் பெண்களும் இந்த சாலையிலேயே நடந்து சென்று வருகின்றனர். அவ்வழியில் மதுபான கடை அமையும்பட்சத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு இருக்காது.

மேலும் இந்த மதுபான கடையின் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கும் அங்கு செயல்படும் தொழிற்சாலைகளுக்கும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாகக்கூடும்.

எனவே அப்பகுதியில் அமையவுள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றிட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...