கோவை புறநகர் பகுதிகளில் தவறவிட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு - எஸ்.பி தலைமையில் நிகழ்ச்சி

கோவை மாவட்டத்தில் குறிப்பாக புறநகர் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ,22 லட்சம் மதிப்பிலான 153 செல்போன்கள் உரிமையாளார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் மட்டும் 30 பேர் உளவுத்துறை கண்காணிப்பின் கீழ் உள்ளதாக மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டத்தில் குறிப்பாக புறநகர் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ,22 லட்சம் மதிப்பிலான 153 செல்போன்கள் உரிமையாளார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.






அதன் பின் செய்தியாளார்களிடம் பேசிய மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறும் போது : மாவட்ட சைபர் கிரைமில் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 3 குழுக்கள் அமைக்கப்பட்டு இது வரை மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.90 லட்சம் மதிப்பிலான 941 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புகையிலை வழக்குகள்

கடந்த 9 மாதத்தில் மாவட்டத்தில் 371 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 515 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும்,அவர்களிடமிருந்து ரூ.73.54 லட்சம் மதிப்புள்ள 551.787 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 288 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 417 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.56,39 லட்சம் மதிப்புள்ள 380.282 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ 19 லட்சம்மதிப்புள்ள உயர்ந்த ரக போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை குறி வைக்கும் குட்கா விற்பனையை தடுக்க இது வரை 951 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 1001 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.1.59 கோடிமதிப்புள்ள 18,042.280 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 670 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 712 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.1.40 கோடி மதிப்புள்ள 15,092.300 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லாட்டரி

கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 310 குற்றவாளிகள் மீது 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய். 12,60,400/ மதிப்புள்ள 31,510 எண்ணிக்கையிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய். 4,05,015/- ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 241 குற்றவாளிகள் மீது 213 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய். 5,38,360/ மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய். 3,24,450/- ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



சூதாட்டம்

சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 1378 குற்றவாளிகள் மீது 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.38,95,800/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 894 குற்றவாளிகள் மீது 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.33,26,480/- பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

589 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 491 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ. 2.42 கோடி மதிப்புள்ள திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருட்டு

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 352 திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 388 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.1.85 கோடி மதிப்புள்ள திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் (POCSO) சம்மந்தமாக 235 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 147 வழக்குகள் நீதிமன்ற விசாரனை கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 குற்றவாளிகளில் ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 06 குற்றவாளிகளுக்கு 15 முதல் 20 வருடம், 02 குற்வாளிகளுக்கு 10 முதல் 15 வருடமும் சிறை தண்டனையும் பெற்றுதரப்பட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றங்கள் (POCSO) சம்மந்தமாக 209 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 137 வழக்குகள் நீதிமன்ற விசாரனை கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 12 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனையும் பெற்றுதரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார். 

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...