ஊழல் எதிர்ப்பு வாரம்: கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வாக்கத்தான் மூலம் விழிப்புணர்வு பேரணி

நாடு முழுவதும் அக்., 31 முதல் நவ., 6ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



கோவை: ஆண்டுதோறும் அக்., 31 முதல் நவ., 6ம் தேதி வரை ஊழல் எதிர்ப்பு வாரம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு "வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா" என்ற நோக்கோடு பொதுமக்களிடையே பல்வேறு அரசு துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஊழல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கோவையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, பள்ளி மாணவர்களிடையே "வளர்ந்த நாடாக உருவாக ஊழலற்ற இந்தியா" எனும் தலைப்பில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.



இதனை தொடர்ந்து, இன்று வங்கி ஊழியர்கள் சார்பில் மனித சங்கிலி மற்றும் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



வ.உ.சி மைதானத்தில் தொடங்கிய வாக்கத்தான் நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கோவை மண்டல மேலாளர் அன்புமணி, அரசு தொடர்பான இடங்களில் பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக, வெளிநாடுகளை போன்று விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பள்ளியில் பயிலும் போதே லஞ்சம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தினால், வருங்கால தலைமுறை ஊழலற்ற இந்தியாவாக உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல துணை மேலாளர் முனுசாமி, கோவை கிளை வங்கியின் உதவி பொது மேலாளர் ராம்தாஸ்,இண்டஸ்ட்ரியல் தொடர்பு துறை தலைமை மேலாளர், பிரவீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...