சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு சுவர் எழுப்ப மண் எடுக்க இயக்குநர்கள் திருப்பூர் வருகை - பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நினைவு சுவர் எழுப்ப மண் எடுக்கும் நிகழ்விற்காக திருப்பூருக்கு வருகை தந்த திரைப்பட இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர்வி உதயகுமாருக்கு உள்ளிட்டோருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



திருப்பூர்: சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட 1,040 வீரா்களின் நினைவை போற்றும் வகையில் நாட்டில் 75 இடங்களில் நினைவு சுவா் எழுப்பப்பட உள்ளது. இந்த நினைவு சுவா்களை எழுப்ப சுதந்திர போரட்ட வீரா்களின் நினைவிடங்களில் மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஊர்களில் மண் சேகரிக்கும் நிகழ்வாக தாய்மண் யாத்திரை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் சக்ரா விசன் இந்தியா பவுண்டேசன் சார்பில் நடைபெற்று வருகிறது.



இதனையொட்டி திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் உள்ள பொங்காளி முதலியார் நினைவு இடத்திற்கு வருகை தந்த இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, உள்ளிட்டோர் பொங்காளி முதலியார் திருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



இதனையடுத்து அவரது சொந்த ஊரான இடுவம்பாளையத்தில் இயக்குநர்கள் மண்ணை சேகரித்து சென்றனர். முன்னதாக இடுவம்பாளையம் பகுதிக்கு வந்த இயக்குனர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...