கோவை அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள வேலாயுதம்பாளையம் கல்லன்காட்டு தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் விவசாயி அப்புசாமி. இவர் தொண்டை புற்றுநோய் காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நோயின் தீவிரம் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் அருந்த முடியாத நிலை ஏற்பட்டதால் அப்புசாமி மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே இன்று காலை வழக்கம் போல் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் சக்திவேல், வீட்டின் அருகே உள்ள கிணற்றிக்கு சென்று பார்த்த போது அப்புசாமி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.



தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த தீயனைப்பு துறையினர் அப்புசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...