ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள காதுகேளாதோர் பள்ளி, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 72 வது வார்டு ஆர்.எஸ்.புரம் பகுதியில் காதுகேளாதோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது, முதல்வரின் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் 110.50 லட்சம் மதிப்பீட்டில் மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இதற்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவ - மாணவிகளிடையே பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி. அப்பள்ளியில் மேற்கொள்ளப்பட உள்ள திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், பள்ளியில் கூடுதல் ஆய்வுக்கூடங்கள் உணவு அருந்தும் அறை மற்றும் மாணவியர் தங்கும் விடுதி ஆகியவை திட்டத்தில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆன்ந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.