பொள்ளாச்சி புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவன், பெண் உட்பட நான்கு பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை

பொள்ளாச்சி கிழக்கு பகுதியில் இன்று காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை போலிஸார் கைது செய்தது. இந்த கஞ்சா விற்பனை கைதில் கல்லூரி மாணவர்களும் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் அங்குள்ள வஞ்சியாபுரம் பிரிவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கஞ்சா வத்திருந்த வாலிபரை கைது செய்து விசாரித்ததில் அவர் கிணத்துக்கடவு நல்லட்டி பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சூரிய பிரகாஷ் (19) என்பது தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் ஊஞ்சவேலம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது கஞ்சா விற்றதாக சூலூர் மற்றும் செஞ்சேரி குமாரபாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி சாந்தலட்சுமி (59) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது .

இதே போல் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் அங்குள்ள பெட்டதாபுரம் ஆர்ச் அருகே நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக நீலகிரி மாவட்டம் கூடலூர் திருவள்ளூர் நகரத்தை சேர்ந்த பிரதீப் (22) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

மேட்டுப்பாளையம் போலீசார் அங்குள்ள ஒரு பேக்கரி அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக அன்னூர் ரோட்டை சேர்ந்த பிரசாந்த் (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கஞ்சா விற்ற குற்றத்துக்காக கைதாகி சிறையில் அடைக்கபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...