சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலகங்களுக்கு கேடயங்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டு

சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழாவில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.


கோவை: சுகாதாரத் துறையின் நூற்றாண்டு விழா இன்று கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், சுகாதார துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய 44 அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற 17 பேருக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கி பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கொரோனா பேரிடர் காலத்தில் பிற நாடுகளை விட நம் நாட்டின் பொது சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு ஓய்வின்றி பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் சுகாதார பணியாளர்கள் அனைவரும் முக்கிய காரணம்.

மேலும், ஒரு மருத்துவராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக, தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் தொடர்பாக குறு நாடகங்கள் கலை நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கழிவுநீர் தொட்டியில் விழுந்த இரு ஒப்பந்த ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி

கோவை சாய்பாபா காலனியில் கழிவுநீர் உந்து நிலையத்தில் மோட்டார் பழுது பார்க்க இறங்கிய இரு மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 40 அ...

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...