மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்கள் வேடமணிந்து நூதன முறையில் கோவை ஆட்சியரிடம் மனு

கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்தனர்.


கோவை: அகில பாரத மக்கள் கட்சியினர் சிவனடியார்களை போல் வேடமணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தனர். அப்போது அவர்கள் கார் சிலிண்டர் வெடிப்பு மற்றும் மாடு கடத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மனு அளித்ததை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அகில பாரத மக்கள் கட்சியின் தலைவர் ராமநாதன் பேசியதாவது, கோவையில் இருந்து பிற மாநிலங்களுக்கு அதிகமாக மாடுகள் கடத்தப்படுகிறது. அவ்வாறு கடத்தப்படும் வாகனங்களில் கஞ்சா உட்பட பல்வேறு போதை பொருட்களும் கடத்தப்படுகிறது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து சிவசேனா அமைப்பின் மாநில துணை தலைவர், புழவஞ்சி பேசியதாவது, 1998 குண்டு வெடிப்பில் கோவை நகரம் சுடுகாடு போல் காட்சி அளித்தது. தற்போது நடைபெற்றுள்ள இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சர்வதேச தீவிரவாதிகள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் இந்து அதிரடி படை தலைவர் ராஜகுரு, இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கப்படுவதாகவும், தூக்கு தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...