கொடநாட்டில் காவலாளி ஓம்பகதூர் தலைகீழாக கட்டி வைக்கப்பட்ட மரம் அகற்றம் - உரிய விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் கா.ராமச்சந்திரன் உறுதி

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொள்ளை சம்பவத்தின் போது காவலாளி ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த மரத்தை எஸ்டேட் நிர்வாகம் அனுமதியில்லாமல் அகற்றியுள்ளது.



நீலகிரி: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து தலைகீழாக கட்டி வைக்கப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றியது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் பொது சுகாதார நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி கொடநாடு பங்களாவில் கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பங்களாவில் கொள்ளை அடிக்க 8-ஆம் நம்பர் கேட் வழியாக உள்ளே சென்றுள்ளனர்.

பங்களாவின் முன் நிறுத்தி வைக்கபட்டிருந்த லாரியில் இரவு காவலில் இருந்த கிருஷ்ண தாபாவை தாக்கி லாரியில் கட்டி வைத்த அவர்கள், பின்னர் 10-நம்பர் கேட்டில் இருந்த ஓம்பகதூரை அங்கிருந்த மரத்தில் தலைகீழாக கட்டி வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர்.

தொடக்கத்தில் கோத்தகிரி போலிசார் விசாரித்த அந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிசார் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் ஓம்பகதூர் தலைகீழாக கட்டிவைத்து கொலை செய்யப்பட்ட மரத்தை எஸ்டேட் நிர்வாகம் வெட்டி அகற்றி இருப்பதும் அதற்கு பதிலாக புதிதாக மரக்கன்று ஒன்றை நட்டு வளர்த்து வருவதும் தெரிய வந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், மரம் வெட்டி அகற்றப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...