கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த் ஒரு சமூக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது - அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாத் அமைப்பினர்

பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சார்பில் அறிவித்துள்ள பந்த், ஒரு சமூக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உரிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளரிடம் அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து அக்டோபர் 31 ஆம் தேதி கோவை மாவட்ட பாஜக முழு அடைப்பு அறிவித்திருந்த நிலையில், இந்த பந்த் அறிவிப்பு ஒரு சமூக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாத் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



இன்று மாநகர காவல் ஆணையாளரை சந்தித்து பேசிய ஜமாத் அமைப்பினர், இந்த பந்த் அறிவிப்பு தங்கள் சமூக மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இஸ்லாமிய மற்றும் ஜமாத் அமைப்பினர் கூறும் போது: வரும் 31 ஆம் தேதி கோவையில் பாஜக, சங் பரிவார் அமைப்புகள் சார்பில் அறிவித்துள்ள பந்த், ஒரு சமூக மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக போதிய வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் அவதியடைந்துள்ளனர்.

தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் இந்த மாதிரியான பந்த் அறிவித்துள்ளதால் கலவர சூழல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் உரிய பாதுகாப்பை காவல் துறை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து, இஸ்லாமிய அமைப்புகளிடம் காவல் துறை என்ன ஒத்துழைப்பு எதிர்பார்க்கிறது, எங்களது சந்தேகம் உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. பந்த் அறிவிப்பால் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால் அனைத்து இஸ்லாமிய அமைப்பு கூட்டமைப்பினர் காவல் ஆணையாளரை சந்திக்க வந்துள்ளோம்.

பந்த் தொடர்பாக அழைத்து பேசி பந்த் கைவிடபடுமா? அல்லது நடவடிக்கை மூலம் நிறுத்தப்படுமா என காவல் துறை அதிகாரிகள் தான் முடிவு செய்வார்கள். நீதிமன்றத்தில் வழக்கு சென்றுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...