கோவை கார் வெடிப்பு விபத்து: வழக்கில் கைதானவர்களின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை

முதலில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதிகளில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ள கார்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.


கோவை: கடந்த 23 ஆம் தேதி உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்த விபத்தில் ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக காவல் துறை உயர் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பின் கீழ் மேற்கொண்ட புலன் விசாரணையில் கோவையில் சதி திட்டம் அரங்கேற்ற திட்டமிட்டதும், இறந்த முபின் வீட்டில் கிலோ கணக்கில் வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், கூட்டு சதி, இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், UAPA சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ்உக்கடத்தை சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27),ஃபிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் இரவு இறந்த முபினின் உறவினரான அஃப்சர் கான் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவரும் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில்,விசாரணைக்கு கூடுதலாக அவசாகம் வேண்டும் என்று மூன்று நாட்கள் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தனிப்படை போலீசார் கைதானவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கைபற்றப்பட்ட விடயங்கள் குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.



முதலில் கைது செய்யப்பட்ட ஐவரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகளில் கேட்பாறற்று கிடந்த வாகனங்கள் போலீசாரால் அப்புறபடுத்தப்பட்டன. இந்த வழக்கு இன்று என்.ஐ. ஏவுக்கு மாற்ற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...