கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் கடத்திவரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 3 பேர் கைது

கோவை பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் குட்கா கடத்தலில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் முகமது யூசப், தாசாம்பாளையம் தாஜிதின், கருமமேடு தாமஸ் ஆகியோரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தது.


கோவை: கோவை முழுக்க போதை பொருள் தடை செய்வதில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரகசியகுழு, தனிபிரிவு என தீவிரமாக செயல்படும் கோவை போலீசாருக்கு பெரிய நாயக்கன் பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.

அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.

அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர்.

அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...