கோவையில் மீண்டும் தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் - மாநகரில் தேங்கும் குப்பைகள்

ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மாநகர பகுதியில் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் தாமதம்..


கோவை: கோவை மாநகராட்சி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடமும் பல்வேறு மனுக்களை அளித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கூலி உயர்வு குறித்த தீர்மானம் மேலோட்டமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று முதல் துவங்கி உள்ளனர்.



இதனால் கோவை மாநகரில் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி உள்ளது. நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் அதிகளவு பட்டாசு பெட்டிகள், வெடித்த பட்டாசுகள், இனிப்பு பெட்டிகள் உட்பட குப்பைகள் எடுக்கப்படாமல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது.

தற்போது மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டுள்ளதால் குப்பைகளை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்று வருகிறது.





Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...