அவிநாசி சாலை கடலைக்கார சந்து பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடைகள் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. தீ விபத்தால், ஆயிரக்கணக்கு மதிப்பான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோவை: கோவை அவிநாசி சாலை கடலைக்கார சந்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக் குடோனில், பட்டாசு தீப்பொறி விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் அங்கு பட்டாசு வெடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டாசின் தீப்பொறி அப்பகுதியில் குடோன் வைத்துள்ள சூரத் என்பவரது குடோனில் விழுந்து தீ பற்றி உள்ளது.

தீ மளமளவென பரவிய நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தால்,அக்கடையில் இருந்துகரும்புகை அதிகளவு வந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
இவ்விபத்தினால் ஆயிரக்கணக்கான மதிப்பான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.