கோவை சாய்பாபா காலணி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சாய்பாபா காலணி அருகே வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர் பகுதியில், கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சாலையில் நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகளை குறிவைத்தே இந்த சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

அதுமட்டுமல்லாது இரவில் வெளியூர் செல்பவர்கள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்புபவர்களும் அவர்களது இலக்காக இருக்கிறது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் போலீசாரும் குற்றவாளிகளை கைது செய்து வருவது மட்டுமல்லாமல் ரோந்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை கே.கே.புதூர் சின்னசாமி வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி அம்சவேணி (73). இவர் சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பணி முடிந்து வழக்கம் போல் சாய்பாபா காலனி கிருஷ்ணா நகர் சாலையில் நடந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அம்சவேணியின் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக அம்சவேணி சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்த நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...