கிணத்துக்கடவு பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனத்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

கிணத்துக்கடவில் இருந்து கோவை செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதி அம்பேத்கார் வீதியில் சேர்ந்த வாலிபர் உயிரிழப்பு.


கோவை: கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ரயில் நிலையம் சாலை அம்பேத்கார் வீதியில் வசிப்பவர் மகேந்திரன் இவரது மகன் கார்த்திக் (வயது 20) இவர் கோவை சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு வழக்கம் போல் தொழிற்சாலைக்கு இருசக்கர வாகனத்தில் கோவை சாலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கார்த்தியை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த அடையாம் தெரியாத நான்கு சக்கர கூறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...