திருப்பூரில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு: பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன் மலர்வளையம் வைத்து மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி நாடு முழுவதும் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வரும் நிலையில், திருப்பூரில் பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: நாடு முழுவதும் இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறை பணியில் உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



திருப்பூர் மாநகர ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கும், பணியில் உயிர்நீத்த 264 காவலர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் கவாத்து நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் எஸ்.பிரபாகரன், மாவட்ட கண்காணிப்பாளர் சேசாங் சாய், துணை ஆணையர்கள் அபினவ் குமார், வனிதா, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.



தொடர்ந்து பணியின் போது உயிர்நீத்த காவலர்கள், ராணுவ வீரர்களுக்கு 48 குண்டுகள் முழங்க மரியாதையை செலுத்தப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் ஏராளமான காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...