கோவையில் பணியின் போது போல்ட் நட்டை விழுங்கிய எலக்ட்ரீசியன் - சவாலான அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்..!

இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில் போல்ட் நட் சிக்கியுள்ளது ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மிகுந்த சவாலான அறுவை சிகிச்சையை கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு தொண்டை, பிரிவு தலைவர் டாக்டர். அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள் செய்து அவரை காப்பாற்றியுள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார்.

இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, அவர் விழுங்கிய போல்ட்நட், அவரது இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில் உள்ள மூச்சுக் குழாயில் சிக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.



உடனடியாக அந்த நபருக்கு மூச்சுக்குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து அந்த போல்ட் நட் அகற்றப்பட்டது. தற்போது, அவர் அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக உள்ளார்.

இந்த சிறப்பு அறுவை சிகிச்சை காது மூக்கு தொண்டை பிரிவு பேராசிரியர் Dr.A.R.அலி சுல்தான் தலைமையில், DR.V.சரவணன், மயக்கவியல் மருத்துவர்கள் மணிமொழிச் செல்வன் மதனகோபாலன் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து வெற்றிகரமாக செய்து முடித்தனர்.



பெரும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை செய்து முடிந்த மருத்துவ குழுவினரை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் அ. நிர்மலா பாராட்டினார்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...