எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூர் எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவினர் சாலைமறியல்

திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தமிழக சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை அதிமுக எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை சட்டமன்றத்தில் சபாநாயகர் அங்கீகரிக்க வலியுறுத்தி.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அடுத்த எம்ஜிஆர் சிலை அருகே அதிமுகவின் சார்பில் நூற்றுக்கு மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அதிமுக எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் துணை தலைவரை அங்கீகாரம் செய்யாத சபாநாயகர் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



அதிமுகவினரின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...