கோவை மாமன்ற கூட்டத்தில் 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா - பரபரப்பு..!

கோவை மாமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், 47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.



கோவை: கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.



இந்த நிலையில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட47 வது வார்டு அதிமுக உறுப்பினர் பிரபாகரன், ரத்தினபுரி அருகேயுள்ள பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், மாணவர்கள் அமரும் இருக்கைகள் மற்றும் மேஜைகள் அமைக்கப்படாததை கண்டித்து மாமன்ற கூட்டம் நடக்கும்போது தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



பிரபாகரனின் இந்த போராட்டம் காரணமாக திமுக கவுன்சிலர்களுக்கும், அதிமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடைய மேயர் கல்பனா குறுக்கிட்டு அதிமுக ஆட்சி செய்த பத்து ஆண்டுகள் நீங்க என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.



மேலும், இனி வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம், மன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக்கூறி நீங்கள் வெளியே செல்ல அறிவுறுத்தினார்.

இச்சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...