தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் - கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

பாஜகவை பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும், மத்திய பாஜக. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை என அறிக்கை



கோவை: தி.மு.க.வினர் நடத்தும் இந்தி பாடம் உள்ள பள்ளிகள், தமிழ் வழியில் படிக்கும் தி.மு.க. நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என்று கடந்த ஒன்றரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியின் அவலங்களால், தமிழக மக்கள் கொந்தளித்து போயுள்ளனர். ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை மடைமாற்ற, இந்தி எதிர்ப்பு என்ற ஆயுதத்தை தி.மு.க. மீண்டுமொரு முறை கையிலெடுத்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்ற குழு, குடியரசுத் தலைவரிடம் அளித்த பரிந்துரைகளை, இந்தி திணிப்பு என திரித்து, சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பா.ஜ.க.வைப் பொறுத்தவரை அனைத்து இந்திய மொழிகளுக்கு சம முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் கொள்கை இதுதான். மத்திய பா.ஜ.க. அரசு எந்த மாநிலத்திலும், எந்த இடத்திலும் இந்தி மொழியை ஒருபோதும் திணிக்கவில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளிலேயே பள்ளிக் கல்வி முதல் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி இருக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை. இதனைத்தான் தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.

தாய் மொழி வழி கல்விக்கு பா.ஜ.க. அரசின் புதிய கல்விக் கொள்கை வழி செய்கிறது. ஆனால், அதனை தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கின்றன. மாநில மொழிகளுக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும்,

இந்தியில் அலுவல்கள் நடக்க வேண்டும் என, மத்திய பா.ஜ.க., அரசு கூறவில்லை. புதிய கல்விக் கொள்கையில் கூட, மூன்றாவது மொழியாக இந்தி உட்பட எந்த இந்திய மொழிகளை வேண்டுமானாலும் விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம் என்றே கூறப்பட்டுள்ளது.

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா?

தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும்.

தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்தான், மருத்துவப் படிப்பை இந்தியில் கற்கும் வாய்ப்பை பா.ஜ.க. அரசு மத்தியப்பிரதேசத்தில் உருவாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மற்ற இந்திய மொழிகளிலும் மருத்துவம் படிக்க பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

மருத்துவப் பாட புத்தகங்களை தமிழில் தயாரிக்க உதவியாக, மருத்துவம் தொடர்பான தமிழ் சொற்கள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது. இந்த சூழலில்தான் இந்தி திணிப்பு என தி.மு.க. பொய் பிரசாரம் செய்து வருகிறது.

இந்தியை எதிர்க்கும், தமிழ் தான் எங்கள் உயிர் என பேசும் தி.மு.க. நிர்வாகிகளில் யாராவது தங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைத்துள்ளார்களா?

தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், எத்தனை பள்ளிகளில் இந்தி பாடம் உள்ளது? என்பதை வெள்ளை அறிக்கையாக தி.மு.க. தலைமை வெளியிட வேண்டும்.

தி.மு.க.வின் இந்தி எதிர்ப்பு நாடகத்தை நம்பி இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...