கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு..!

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி, சுகாதார ஆய்வாளர் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆட்சியர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக பிரிவுகள், கணினி அறை பதிவேடுகள் அறை உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் நிலுவையில் உள்ள பொதுமக்களின் விண்ணப்பங்கள் குறித்தும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பணியாற்றும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



இதனை தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி மற்றும் அதே பகுதியில் இயங்கி வரும் அரசு ஐடிஐ பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, விடுதிகளில் மாணவ -மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அந்த விடுதிகளில் உள்ள சுகாதார நிலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.



இதேபோல் கோவை, மாநகராட்சியின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன், வரி வசூல் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கோவை வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பொழுது அங்கு வழங்கப்படும் அனுமதிகள் குறித்தும் நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் பொழுது வடக்கு கோட்டாட்சியர் பூமா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய வடக்கு மண்டல கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...