இந்தி திணிப்புக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.


கோவை: இந்தியா முழுவதும் உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மையான மொழியாக்க முயன்றுள்ள மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் சுமார் 50க்கும் மேற்ப்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது பேசிய மாணவர் சங்கத்தினர் இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இந்தியை முதன்மை மொழியாக ஆக்கியுள்ளனர். இதனால் பிற மாநில மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் உள்ளது.

அனைத்து மொழியையும் ஒரே சமமாக பார்க்க வேண்டும். இன்று தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்பிற்கு எதிராக தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இந்திய மாணவர் சங்கத்தினர் வரவேற்கிறோம், அதே போல உயர் கல்வி நிலையங்களில் இந்தி கட்டாயத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...