தனியார் அனாதை மற்றும் கருணை இல்லங்கள் நிறுத்த வேண்டும் - திருப்பூர் மாநகராட்சி முன் போரட்டத்தில் ஈடுபட்ட 50க்கு மேற்பட்டோர் கைது

விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும், தனியார் தொண்டு நிறுவனங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்த தலித் விடுதலைக் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோரை போலிஸார் கைது செய்தது.


திருப்பூர்: தமிழகத்தில் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும். என தலித் விடுதலைக் கட்சியினர் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்



திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் மூன்று குழந்தைகள் உயிரிழந்ததை கண்டித்தும் குழந்தை இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்குஅதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதே போல் அனாதை இல்லங்கள்,கருணை இல்லங்கள் என்கின்ற பெயரில் தனியார் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளை அரசு தடை செய்ய வேண்டும்.



மேலும் தமிழகத்தில் உள்ள அனாதை விடுதிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என் பலகோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் தலித் விடுதலைக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...