கோவை பொள்ளாச்சி அருகே லாரியில் கடத்தப்பட்ட 2 டன் குட்கா பறிமுதல் - 5 பேர் கைது

பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில் வாகன சோதனையின் போது, லாரியில் கடத்திச் சென்ற 2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தூத்துக்குடி, நெல்லை மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோவை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், வால்பாறை உட்கோட்ட டி.எஸ்.பி கீர்த்திவாசன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலையில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குட்கா பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(22), சத்யா (21), செந்தில்(43), திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தஅருள்குமார் (36), ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ்(21) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



மேலும், அவர்கள் விற்பனைக்காக கடத்திச் சென்ற சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள2 டன்எடை கொண்ட குட்கா பொருட்கள், ரூ.16,200/- பணம் மற்றும் நான்கு சக்கர வாகனம்-2 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இதனைதொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரே நாளில் 2 டன் அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...