கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கோவை: கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்றும் மாலை கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள கோவை சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் பாதி அளவு மூழ்கிய நிலையில் காணப்பட்டது. மழைநீர் தேங்கிய சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.